பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட தேர்தல்களில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அங்கு ஆட்சி செய்து வந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் 


பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மொத்தம் உள்ள 41 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இம்ரான்கான் கட்சிக்கும் 2 இடங்கள்தான் கிடைத்தன.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனது கட்சி வெற்றி பெற்றிருப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் என்றாவது ஒருநாள், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்று நவாஸ் ஷெரீப் கூறினார்.


இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்தப்பட்ட தேர்தல்களில் மோசடி நடந்ததாக போராட்டம் வெடித்து உள்ளது. பொதுமக்கள் போராட்டம் நடத்தும் வீடியோவை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 


 



 


ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாப்பர்பாத்தில் முஸ்லீம் மாநாட்டு கட்சியின் உறுப்பினர் நவாஸ் செரீப் கட்சியினரால் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து முசாப்பர்பாத், கோட்லி, சினாரி மற்றும் மிர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் வெடித்தது. தேர்தலில் மோசடி செய்யப்பட்டதை தொடர்ந்து நவாஸ் செரீப் கட்சியினர் எங்களுடைய கட்சியின் தொண்டரை கொலை செய்து உள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறினால், எதிர்காலத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு அவர்களே பொறுப்பு என்று என்று முஸ்லீம் மாநாட்டு கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


கடந்த வருடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் போராட்டம் வெடித்தது. மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் கோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.