பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன், ஹோலி பண்டிகையை ஒட்டி,  இந்து சமுதாய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்து சமூகத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ட்வீட் செய்துள்ளார். 


இந்த விழா பாகிஸ்தானில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.


பாகிஸ்தான் (Pakistan) நாடாளுமன்ற சபாநாயகர் அசாத் கைசர் உட்பட பல தலைவர்களும் இந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்து சமூகத்தினருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். 


"ஒளி மற்றும் வண்ணங்களின்  திருவிழாவான ஹோலி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது," என்று சபாநாயகர் கூறினார்.  பாகிஸ்தானின் முன்னேற்றத்தில் இந்து சமூகத்தின் பங்கைப் அவர் பாராட்டினார்.


ALSO READ | North Korea: ஆபாச படம் பார்த்த சிறுவனையும் குடும்பத்தையும் நாடு கடத்திய Kim Jong Un ...!!!


பாகிஸ்தானில் தங்கள் மத விழாக்களை பகிரங்கமாக கொண்டாட அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரிமை உண்டு என்று சபாநாயகர் அசாத் கைசர் கூறினார்.


பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மை இன மக்களாக உள்ளனர். 75 லட்சம் இந்துக்கள் பாகிஸ்தானில் வாழ்கின்றனர் என அதிகாரப்பூர்வ தக்வல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக, ஆஸ்திரேலிய (Australia) பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்து சமுதாயத்தினருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


" ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து சமூகம், எனது நல்ல நண்பர் நரேந்திர மோடி மற்றும் அதைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும், மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள்!" என அவர் ட்வீட் செய்துள்ளார். 


ஹோலி என்பது  ஒரு இந்து வசந்த கால பண்டிகை, இது இந்தியாவிலும் நேபாளத்திலும் முக்கியமாக கொண்டாடப்படுகிறது, ஆனால் இப்போது உலகின் பிற பகுதிகளிலும் பரவலாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா இந்துக்கள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது.


இது  இந்து பண்டிகையாக இருந்தாலும், பெரும்பாலும் மற்ற மதத்தினரும் கொண்டாடப்படுகிறார்கள். வசந்த  காலத்தின் வருகையை இந்த பண்டிகை குறிக்கிறது.


ALSO READ | சூயஸ் கால்வாய் ட்ராபிக் ஜாம் எப்போது அகலும்; அதிகாரிகள் கூறுவது என்ன


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR