மக்களை தேர்தல் முடியும் வரை எல்லையில் பதற்றம் தொடரும்!
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடியும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை நிலவும் என பாகிஸ்தான் பிரதம்ர இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடியும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை நிலவும் என பாகிஸ்தான் பிரதம்ர இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் CRPF வீரர்கள் 40 பேர் பலியானதை தொடர்ந்து இரு நாடுகளின் உறவில் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானின் பாலகாட் பகுதியில் இந்திய இராணும் அதிரடி தாக்குதல் நடத்தி 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்தாக தெரிகிறது. இந்த தாக்குதலில் போது இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். இதனைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் மூலும் அபாயம் ஏற்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டு வர பாகிஸ்தான் ராணுத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய போர் விமானி அபிநந்தனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுதலை செய்தார். மேலும் இரு நாடுகளுக்கிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனினும் அவ்வப்போத் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த விதிகளை மீறி இந்திய எல்லைக்குள் நுழைய முற்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு டான் நாளிதழில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இன்னும் ஆபத்து நீங்கவில்லை என்றும், இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பதற்றம் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் எந்த அத்துமீறலையும் தடுக்க ஏற்கனவே தயார் நிலையில் தாங்கள் இருப்பதாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார்.