பனாமா பேப்பர்ஸ் விவகாரம்; நவாஸ் ஷெரீப்பை விசாரிக்க உத்தரவு
பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் திடுக்கிடும் தகவல்கள்
அண்மையில் வெளியாயின. அதில் ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட பலருடைய பெயர்கள் இடம்பெற்று இருந்தது.
நவாஸ் ஷெரிப் பெயர் இடம் பெற்றிருந்தது அந்நாட்டில் பரபரப்பை கிளப்பியது. இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ -இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் உட்பட பலர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரிப்பை விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.