பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 9-ம் தேதி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவடைந்தது. பார்லிமென்ட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்கியது. இந்த தொடர் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடக்க உள்ளது.


இந்த தொடரில் பாராளுமன்ற அவை மற்றும் டெல்லி மேல் சபையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளன என தெரிகிறது.பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் குறித்து 2 அவைகளிலும் விரிவான விவாதம் நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைக்க திட்டமிட்டு இருக்கிறது என தெரிகிறது.


தமிழகத்தை பொறுத்தவரை நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்தல், தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டது ஆகிய பிரச்சினைகளை அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் இரு அவைகளிலும் பலமாக எழுப்ப திட்டமிட்டு உள்ளனர்.