பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. இரு அவைகளும் கூடியதும், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டத்துடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
கடந்த 10-ம் தேதி இரவு அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.