பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதில் மக்களவையில் நிதி தீர்வு மற்றும் பாதுகாப்பு மசோதா, முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா உள்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முத்தலாக் மசோதா நிறைவேறாமலேயே கூட்டத் தொடர் நிறைவுபெற்றது. இந்த மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர் பார்கபடுகின்றனர். 


இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது.


மேலும், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரையிலும், இரண்டாவது அமர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும் நடைபெறும்” என்றார்.