கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 26) கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய கொல்கத்தா விமான நிலையத்திற்கு ஒரு நபர் வந்தார். அவர் விமானத்துக்குள் சென்றவுடன், தன் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு, இந்த விமானத்தை தான் தகர்க்க போறேன். இந்த விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் இறக்க போகிறார்கள் எனக்கூறி தனது தொலைப்பேசியில் வீடியோ காட்சியாக பதிவு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள், மற்றவர்களிடம் இதைக்கூற, விமானத்தில் இருந்த பயணிகளுக்கு பெரும் பயத்தை ஏற்ப்படுத்தியது. மேலும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதுக்குறித்து விமான அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. 


உடனடியாக விமான அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ATS) தகவல் தெரிவித்தது. பின்னர் விமானம் திருப்பி பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டது. மேலும் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் கீழே இறங்குமாறு கூறப்பட்டது. 


சிஐஎஸ்எப் போலீசார் மற்றும் ஏடிஎஸ் அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரபப்பு ஏற்ப்பட்டதுடன், அங்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.