டெல்லியில் பயனிகள் ரயில் தடம்புரண்டது!
இச்சம்பவத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
புதுடெல்லி: காஜியாபாத் பயணிகள் ரயில் ஒன்று ஓக்லா இரயில் நிலையத்தில் தடம் புரண்டதில் பயனிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
வடக்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் நிடின் சௌத்ரி இதுகுறித்து கூறுகையில், "பயனியர் ரயிலின் பெட்டி ஒன்றில் சக்கரம் ஒன்று தடம்புரண்டது. காலை 9.45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
"சம்பவத்தில் பயணிகள் காயம் ஏதும் இன்றி தப்பித்தனர்" என்று கூறினார்.
விபத்து ஏற்பட்ட ரயிலில் பயணித்த பயணிகள் மற்றொரு ரயிலில் தொடர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் "இச்சம்பவத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.