ராஷ்டிரிய ஜனதா தளம் மனுவை தள்ளுபடி செய்தது பாட்னா உயர்நீதிமன்றம்
பாட்னா உயர்நீதிமன்றம், ஜனதா தளம் (ஐக்கிய) - பாரதிய ஜனதா கட்சிகள் இனைந்து புதிய பீகார் அரசாங்கத்தை உருவாக்கியதற்கு எதிராக, ராஷ்டிரிய ஜனதா தளம் தொடுத்த மனுவை தள்ளுபடி செய்தது.
ஜூலை 28 ம் தேதி வெள்ளிக்கிழமை ராஷ்டிரிய ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர் சரோஜ் யாதவ் மனு தாக்கல் செய்தார். பாட்னா உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மனுவை ஏற்றுக்கொண்டது, ஆனால் நிதீஷ் குமாரின் தரப்பில் சோதனைக்கு உட்படுத்தபட்டு பின்னர் மறுத்துவிட்டது, ஜூலை 31 க்கு முன்னர் விசாரணையின் சாத்தியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம், பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஷ்வி யாதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் குற்றம்சாட்டினார், ஜே.டி.யு. மற்றும் ஆர்.ஜே.டி இடையே இருந்த பெரும் கூட்டணியை கலைத்தார். சில மணி நேரத்திற்குள் நிதீஷ் பழைய கூட்டாளியான பி.ஜே.பி உடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்றார்.
நிதீஷ் குமார் தலைமையிலான அரசாங்கம் பீகாரில் 131 வாக்குகளை பெற்றது. இதற்கிடையில் பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி புதிய பீகார் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
"தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் பீகாரை நாங்கள் 7.5 ஆண்டுகளில் முன்னேற்றுவோம் அதே வேகத்தில் அபிவிருத்தி செய்வோம்," என சுஷில் மோடி கூறியுள்ளார்.