மூன்றாம் தரப்பினருக்கு பயனரின் தகவலை பகிர்வதில்லை -Paytm!
பணப்பரிவர்த்தனை செயலியாக, பேடிஎம் வாடிக்கையாளர்கள் விவரங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதில்லை என தெரிவித்துள்ளது!!
பணப்பரிவர்த்தனை செயலியாக, பேடிஎம் வாடிக்கையாளர்கள் விவரங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதில்லை என தெரிவித்துள்ளது!!
உலகில் அனைத்தும் டிஜிட்டல் முறையாக மாறிவரும் நிலையில், பல இணையதள நிறுவனகள் பல பிரச்சனைகளில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை செயலியான பேடிஎம் நிறுவனம் அவர்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை மற்றவரிடம் பகிர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகிவந்தது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை பேடிஎம் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தமது வாடிக்கையாளர்களின் விபரங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்துவிட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக பதிலளித்த பேடிஎம் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களின் சுய விவரங்களை ஒருபோதும் மூன்றாவது நபர்களுக்கோ அல்லது அரசிற்கோ வழங்கமாட்டோம் என கூறியுள்ளது!