ஆம் ஆத்மி மற்றும் பாஜக நடத்தும் போராட்டங்களுக்கு பலியாடுகளாக இருப்பது டெல்லி மக்கள் தான் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று மாதங்களுக்கு முன், டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி MLA-க்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் IAS அதிகாரிகள் எவ்வித ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை எனவும், IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எவ்வித முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் எனவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.


இதையடுத்து, IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவால் கடந்த 6 நாட்களாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் ஈடுப்பட்டு வருகின்றார். 


இந்த போராட்டம் ஆனது வெறும் நாடகம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...



"டெல்லி முதல்வர், ஆளுநர் அலுவலகத்தில் தர்ணாவில் அமர்ந்துள்ளார்.
பா.ஜ.க-வினர் முதல்வர் வீட்டில் தர்ணாவில் அமர்ந்துள்ளனர்.
டெல்லி அதிராகத்துவம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இதை எவற்றையும் கண்டுகொல்லாமல் பிரதமர் பார்வையற்றவராய் உள்ளார்.
இந்த நாடகங்கள் அனைத்திற்கும் பலியாடுகளாய் இருப்பது டெல்லி மக்கள் தான்" என பதிவிட்டுள்ளார்.


டெல்லி முதல்வர் போராட்டத்தில் இறங்கியதன் பின்னர் முதன்முறையாக இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


மேற்குவங்க முதல்வர் மமதா பேனர்ஜி, கர்நாட்டக முதல்வர் HD குமாரசாமி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வர் சந்திர பாபு நாயுடு, நடிகர் கமல் ஹாசன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் டெல்லி முதல்வரின் போராட்டம் குறித்து குரல் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.