உணர்ச்சியற்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்க விலை கொடுக்கும் டெல்லி மக்கள் -சிதம்பரம்
வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று `உணர்வற்ற மற்றும் குறுகிய பார்வை கொண்ட` தலைவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கான விலையை மக்கள் செலுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று "உணர்வற்ற மற்றும் குறுகிய பார்வை கொண்ட" தலைவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கான விலையை மக்கள் செலுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
குடியுரிமை சட்டத்தின் மீதான திருத்தம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் வரை குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் குரல்களை அரசாங்கம் கேட்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் திங்களன்று திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மீது வன்முறை பரவியதால், 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் டெல்லி தலைமை காவலர் ஒருவரும் அடக்கம். மேலும் பல துணை ராணுவ மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 50 பேர் காயமடைந்தனர்.
ஆத்திரம்மிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் வீடுகள், கடைகள், வாகனங்கள் மற்றும் ஒரு பெட்ரோல் பம்ப் ஆகியவற்றை எரித்தனர்.
இந்நிலையில் திங்களன்று டெல்லியில் நடந்த வன்முறை மற்றும் உயிர் இழப்பு மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், கடுமையான கண்டனத்திற்கு தகுதியானதாகவும் திரு சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்., "அதிகார உணர்ச்சியற்ற மற்றும் குறுகிய பார்வை கொண்ட தலைவர்களை நிறுத்துவதற்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்," என்று அவர் குற்றம் சாட்டினார்.
"இந்தியா 1955 குடியுரிமைச் சட்டத்துடன் திருத்தமின்றி வாழ்ந்துள்ளது. இந்தச் சட்டத்திற்கு இப்போது ஏன் ஒரு திருத்தம் தேவைப்படுகிறது? இந்த திருத்தம் உடனடியாக கைவிடப்பட வேண்டும்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இப்போது கூட தாமதமாகவில்லை. குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் குரல்களை அரசாங்கம் கேட்டு, அதன் செல்லுபடியாக்கத்தை உச்சநீதிமன்றம் அறிவிக்கும் வரை குடியுரிமை சட்ட திருத்த நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படும் என அறிவிக்க வேண்டும்" என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.
CAA "ஆழமாக பிளவுபட்டுள்ளது" என்றும், அது ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது கைவிடப்பட வேண்டும் என்றும் தனது கட்சி எச்சரித்ததாக காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தங்கள் எச்சரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் உள்ளது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.