குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக டெல்லி, மும்பை, உதய்பூர், ஹரித்வார், பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பேரணிகள்.
புதுடெல்லி: நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (Citizenship Amendment Act- CAA) எதிராக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மகாராஷ்டிராவின் நாக்பூரிலிருந்து வேறுபட்ட செய்தி வெளியாகி உள்ளது. அஸ்ஸாமிற்குப் பிறகு, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தொடர்ந்து வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் நாக்பூரில் குடியுரிமை சட்டத்திற்கு (CAA) ஆதரவாக ஒரு பெரிய பேரணி நடைபெற்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) லோக் ஆதிகர் மன்ச், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற கட்சிகள் நாக்பூரில் சிஏஏவுக்கு ஆதரவாக பேரணியை நடத்தின. பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மூவர்ணக் கொடி மற்றும் சி.ஏ.ஏ.க்கு ஆதரவான சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி மக்கள் வீதிகளில் இறங்கினர். மறுபுறம், இந்த சட்டத்திற்கு ஆதரவாக டெல்லி, மும்பை, உதய்பூர், ஹரித்வார், பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய வெவ்வேறு இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்டன.
டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் (Ramlila Maidan) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பேரணி நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நாடு முழுவதும் நடைபெறும் CAA போராட்டங்கள் குறித்து பிரதமர் மோடி என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து மக்கள் ஆவலுடன் உள்ளனர். பேரணியைக் கருத்தில் கொண்டு, டெல்லி காவல்துறை (Delhi Police) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மறுபுறம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் (Arif Mohammad Khan) ஆதரவு அளித்துள்ளார். பாகிஸ்தானில் சிரமத்திற்கு இடையே வாழ்க்கை வாழும் மக்களுக்கு மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்று அவர் கூறினார். 1985 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் இந்தச் சட்டத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டதாகவும், மோடி அரசு அதற்கு சட்ட வடிவம் கொடுத்துள்ளது எனக் ஆளுநர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம் அகதிகளுக்கு இடம் இல்லை என்ற கேள்விக்கு ஆளுநர் அளித்த பதில், "பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் தேசமாக உருவாக்கப்பட்டால், அவர்கள் அங்குள்ள முஸ்லிம்களைத் துன்புறுத்துவார்களா?" முஸ்லிம்கள் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து வந்தவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவர்கள் துன்புறுத்தப்பட்டதால் அல்ல, பொருளாதார வாய்ப்புகளைத் தேடி வந்தார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.