பெட்ரோல் டீசல் GST-யின் கீழ் கொண்டு வரப்படுமா.. வெளியானது முக்கிய தகவல்!
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அவதிப்படும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
Petrol- Diesel Price: பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு நற்செய்தி உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை அமைச்சர்கள் குழு பரிசீலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை லக்னோவில் நடைபெறும் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதை பற்றி பரிசீலிக்கும். பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டால், விலை பெருமளவு குறையும்.
ஜிஎஸ்டி அமைப்பில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டுமானால், குழுவின் நான்கில் மூன்று பங்கு ஒப்புதல் தேவை. அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள். இருப்பினும், இந்த முன்மொழிவை சில மாநிலங்கள் எதிர்க்கின்றன. பெட்ரோல் டீசல் மீதான வரியை பொறுத்தவரை, அதன் அடிப்படை விலையை விட, அதன் மீதான வரிகள் அதிகமாக உள்ளன. மத்திய அரசு வரி லிட்டருக்கு ரூ.19 என்ற அளவிலும், மாநில அரசு விதிக்கும் வரிகள் கிட்டத்தட்ட 40 ரூபாய் என்ற அளவிலும் உள்ளது.
ALSO READ | பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக உருவாகி வரும் இந்தியா: பிரதமர் மோடி புகழாரம்
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, இருப்பினும், ஒன்பதாவது நாளாக பெட்ரோல் விலை அதிகரிக்காமல் நிலையாக உள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.19 என்ற விலையிலும், டீசல் லிட்டருக்கு ரூ. 88.62 என்ற அளவிலும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 107.26 என்ற விலையிலும், டீசல் லிட்டருக்கு 96.19 என்ற விலையிலும் விற்பனையாகிறது. சென்னையை பொறுத்தவரை பெட்ரோல், லிட்டருக்கு ரூ.98.96 என்ற விலையிலும், டீசல் ரூ. 93.26 என்ற விலையில் விற்கப்பட்டது. இன்றும், விலையிலும் விற்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் பெட்ரோலிய பொருட்கள் மீதான மத்திய அரசின் கலால் வரி வசூல் 48 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, விலைவாசி உயர்வு இருக்கும் போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வசூல் அதிகரித்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் ஜூலை வரை கலால் வரி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டியது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 67,895 கோடி ரூபாய் வசூலானது. 2020-21 நிதியாண்டில், மத்திய அரசு வசூலிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வசூல் 88 சதவீதம் உயர்ந்து, வசூல் தொகை 3.35 லட்சம் கோடியாக இருந்தது.
இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்படுமா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது, இந்தக் கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ''இப்போதுள்ள நிலையில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு, சமையல் சிலிண்டர் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை” என எழுத்து பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | இந்தியாவின் மிகச்சிறந்த மின்சார கார்கள்: இனி பெட்ரோல் விலை பற்றி கவலை வேண்டாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR