நாளை பெட்ரோல் விலை என்ன ஆகுமோ! கலக்கத்தில் மக்கள்
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், இனி உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை ரூ.20-ரூ.25-க்குள் அதிகரிக்கப்படலாம் என சந்தை வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
ரஷ்யா உக்ரைன் இடையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் பெரிய அளவில் ஸ்திரமற்ற தன்மை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், பெட்ரொல் டீசல் விலைகளில் கடும் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
தினமும், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக உலக சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப பெட்ரொல் டீசல் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. நேற்று வரை ரூ.101.40-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று 101.51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை நேற்றைய விலையை விட 10 காசுகள் உயர்ந்து ரூ.91.53-க்கு விற்பனையாகின்றது.
நீண்ட நாட்களாக, அதாவது 100 நாட்களுக்கும் மேலாக, பெட்ரொல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது பொதுமக்கள் மனதில் கலக்கத்தையே உண்டாக்கி வருகின்றது. திடீரென பெட்ரொல் டீசல் விலை எந்த அளவிற்கு உயர்த்தப்படுமோ என்ற அச்சம் உள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, இந்தியா வாங்கும் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயை விலை 110 டாலருக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், இனி உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை ரூ.20-ரூ.25-க்குள் அதிகரிக்கப்படலாம் என சந்தை வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
ரஷ்யா மீதான கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்று பீப்பாய்க்கு $130ஐத் தொட்டுள்ள நிலையில், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகப் பொருளாதாரத்தின் மீட்சி தடம் புரள வாய்ப்புள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் இன்று ஆரம்ப வர்த்தகத்தில் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர். முந்தைய அமர்வில் முதலீட்டாளர் சொத்து மதிப்பு ரூ.246.85 லட்சம் கோடியிலிருந்து ரூ.240.57 லட்சம் கோடியாகக் குறைந்தது. இதன் காரணமாக பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.6.28 லட்சம் கோடி குறைந்துள்ளது.
மேலும் படிக்க | பெட்ரோல் பங்கில் மோசடி: பெட்ரோலில் தண்ணீர் கலப்படம், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR