பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை உயர்ந்ததால், பெட்ரொல் டீசல் விலை உயர்த்தப்பட்டதாக எண்ணை நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 14-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்து கொண்டு வருகின்றனர். 


அதன்படி, சென்னையில் ஜூன் 15ம் தேதியான இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்து ரூ.79.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லாமல் தற்போது நிலவரப்படி ஒரு லிட்டர்  டீசல் ரூ.71.62 -க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.,