டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று மாலை பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கிகள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 


இதனால் எண்ணெய் நிறுவனங்கள் எங்களுக்கு கிடைக்கும் லாபத்திலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை பிடித்தம் செய்துவிட்டால் தொழிலை நடத்த முடியாது. எனவே வங்கிகளின் இந்த அறிவிப்பைக் கண்டித்து ஞாயிறு நள்ளிரவு முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்தன.


இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் முடிவை ஜனவரி 13-ம் தேதி வரை தள்ளிவைப்பதாக அறிவித்தது. எனவே பெட்ரோல் நிலையங்களில் வரும் ஜனவரி 13-ம் தேதி வரை கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது தொடரும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முன்பு அறிவித்தது.


ஆனால் தற்போது பெட்ரோல் பங்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. கார்டு மூலமான பணபரிவர்த்தனைக்கு பெட்ரோல் பங்க்கோ அல்லது வாடிக்கையாளரோ கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஜனவரி 13ம் தேதிக்கு பிறகும் பெட்ரோல் பங்க்குகளில் பணபரிவர்த்தனை கட்டணம் கிடையாது.


பெட்ரோல் பங்குகள் மற்றும் வங்கிகளுக்கு இடையில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.