காஷ்மீரில் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு பெட்ரோல், டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக ஸ்ரீநகர், ஸ்ரீநகர் ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெட்ரோல் நிலையங்களில், தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.


ஒருசிலர் பெட்ரோல், டீசலை கேன்களில் வாங்கி சென்று இருப்பு வைப்பதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர். ஆனால் இப்படி கேன்கள் மற்றும் பிற கன்டெய்னர்களில் எரிபொருட்கள் வாங்கிச்செல்வதற்கு தடை விதிக்கும் வகையில், ஸ்ரீநகர் மாவட்ட கலெக்டர் சகீத் இக்பால் சவுத்ரி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ஐ அமல்படுத்தி உள்ளார்.


இதன்மூலம் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கிச்செல்வது தடை செய்யப்பட்டு இருக்கிறது.


இதற்கிடையே ஸ்ரீநகரில் 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நின்று எரிபொருள்களை நிரப்பி செல்வதாக காஷ்மீர் வாகன ஓட்டி ஒருவர் தெரிவிக்கின்றார்.


இதற்கிடையில் பல இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் காவல்துறை உதவியுடன், கூட்டத்தை ஒழுங்குபடுத்தி பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.


பெட்ரோல் போன்ற எரிவாயு பொருட்களுக்கு மட்டும் அல்லாமல், மருந்து உணவகம் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. முன்னதாக இந்திய போர் தொடுக்கும் முனைப்பில் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் இராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய போர் விமானி அபி நந்தனை இன்று விடுதலை செய்வதாகவும் பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. எனினும் இருநாட்டு எல்லை பகுதிகளும் போர் பதற்றம் குறைந்தபாடில்லை.