புதிய வேலையிலும் ஒரே பி.எஃப் கணக்கு!
அடுத்த மாதத்திலிருந்து வேறு வேலைக்கு மாறினால் அவர்களின் பி.எஃப் அக்கௌன்ட்டும் தானாகவே மாறிவிடும் என்று வருங்கால வைப்பு நிதி தலைமை ஆணையர் ஜாய் தெரிவித்துள்ளார்.
பி.எஃப் எனப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வர பட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் போது, ஏராளமானோர் தங்கள் பி.எஃப் அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். பின்னர் புதிதாக பி.எஃப் அக்கௌன்ட்டை தொடங்கிக் கொள்கின்றனர். தற்போது பி.எஃப் அக்கௌன்ட்டை தொடங்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பிற்காக தங்கள் பி.எஃப் அக்கௌன்ட்டை தொழிலாளர்கள் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். புதிதாக ஒரு நிறுவனத்தில் சேரும் தொழிலாளர்களுக்கு, எந்தவித விண்ணப்பத் தேவையும் இல்லாமல் 3 நாட்களுக்குள் பி.எஃப் அக்கௌன்ட்டை வந்து சேர்ந்துவிடும்.
எனவே வாழ்நாள் முழுவதும் ஒரே பி.எஃப் அக்கௌன்ட்டை பயன்படுத்துவது இனி எளிதாகிவிடும்.