இனி Rail Drishti செயலி மூலம் ரயில் பயணிகள் தங்கள் கால அட்டவணையை நாட்டில் எந்த இடத்திலிருந்தும் கண்காணிக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயணிகள் தங்கள் கால அட்டவணையை நாட்டில் எந்த இடத்திலிருந்தும் கண்காணிக்க ரயில்வே தகவல் மையம் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும், ரயில்கள் இயங்குவதைப் பார்க்கவும், காலவரையறை, சரக்கு ஏற்றுதல் மற்றும் இறக்குதல், பெரிய திட்டங்களின் முன்னேற்றம், பொது அறிவிப்புகள், சரக்கு மற்றும் பயணிகளின் வருவாய், ரயில் நிலையங்களின் விவரங்கள் போன்ற இன்னும் பலவற்றைப் பற்றி இந்த செயலி மூலம் அறிய முடியும்.


இந்த நிலையில் ரயில் தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் Rail Drishti என்ற புதிய இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார். இதன் மூலம் ரயிலில் வழங்கப்படும் உணவுகள், தயாரிக்கும் சமையலறைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை நாம் இனி ஆன்லைனில் பார்க்கலாம்.