ரெயில்வே அமைச்சகத்தின் 4 ஆண்டு சாதனைகள் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு இன்று புதுடெல்லியில் நடைப்பெற்றுத!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவிக்கையில்... ரெயில்வே துறையை ஒரு பொழுதும் தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.


இச்சந்திப்பின் போது ரெயில்வே அமைச்சகத்தின் சாதனைகளை பற்றி தெரிவித்த அவர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் நாளொன்றுக்கு சராசரியாக 4.1 கி.மீட்டர் தொலைவிற்கு புதிய ரெயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த எண்ணிக்கையானது தற்போது 2014-2018 இடைப்பட்ட காலகட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 6.53 கி.மீட்டர் என்ற அளவில் உயர்ந்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.




மத்திய அரசின் இலக்கான புல்லட் ரெயில் திட்ட பணிகளை செயல் படுத்துவதற்கான வேலைகள் நடைப்பெற்று வருகின்றது.


நாட்டிற்கு தேவையான முன்னேற்ற நடவடிக்கைகள், திட்டங்களை செயல்படுத்துகளையில் பிரச்சணைகள் எழக்கூடும், ஆனால் அதனை கலைந்து நாம் முன்னேறி செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.