அமெரிக்க விண்வெளி மையமான நாசா ஆராய்ச்சி மையம் இந்தியாவை சேட்டிலைட் மூலம் படம் படித்து பலமுறை புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது கடந்த 10 நாள் இந்தியாவின் நிலை எப்படி இருக்கிறது என்று அதிர்ச்சியூட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா. இந்த புகைப்படத்துடன் நாசா இந்தியாவிற்கு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. வெளியிட்டுள்ள நாசா, எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தப் புகைப்படத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் தீப்பற்றி எறிவது போன்று சிவப்பு நிற புள்ளிகளாக காட்சியளிக்கிறது. இதை தொடர்ந்து, ஒருவருடத்துக்கு முன்பு நாசா வெளியிட்ட இந்தியாவின் படத்தைப் தனது டிவிட்டரில்  பியூஷ் கோயல் ப.ஜ.க ஆட்சிக்கு பின்னர் இந்தியாவிற்கு 100 சதவிகிதம் மின்சாரம் கிடைக்கப் பெற்றதாக கூறி மோடிக்கு பெருமை சேர்த்துள்ளார். 


அவர் அந்த ட்விட்டர் பதிவில் ப.ஜ.க ஆட்சிக்கு முன் இருந்த இந்தியாவையும், ப.ஜ.க ஆட்சிக்கு பின்னர் இந்தியாவின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு காட்டி பதிவிட்டுள்ளார்.


அந்த புகைப்படத்துடன் அவர் கூறியுள்ளது...!


இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு கீழ் வந்த பிறகு இருளில் இருந்த பல கிராமங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சக இந்திய கிராமவாசிகளின் வாழ்க்கையிலிருந்து இருளை நீக்குவதன் மூலம், ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் முயல்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.