கோவாவில் பிளாஸ்டிக் பை பயன்படுத்தினால் 5000 அபராதம்
ஜூலை மாதம் முதல் கோவாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுப்புற பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், முற்றிலும் இயற்கையான பொருட்கள் பயன்பாட்டை, கோவா மாநில அரசு ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, கடற்கரை நகரம் என்பதால், உலகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் கோவா வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பிளஸ்டிக் பைகளால் பெரும் சுற்றுப்புற சீர்கேடு கோவாவில் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில், வரும் ஜூலை மாதம் முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திட கோவா அரசு தடை விதித்துள்ளது.