புதுடெல்லி: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பண்டிகைகளை நிதானத்துடன் கொண்டாட வேண்டும் எனவும், பண்டிகைகளுக்காக ஷாப்பிங் செய்யும் போது ‘வோக்கல் பார் லொக்கல்’ என்ற உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நினைவில் கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மக்களை வலியுறுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ மூலம் தேசத்தை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ( PM Narendra Modi), நாட்டின் துணிச்சலான வீரர்களுடன் இந்தியா உறுதியாக நிற்கிறது என்றும், பண்டிகைகளை கொண்டாடும் போது இராணுவ வீரர்களுக்காக ஒரு விளக்கு ஏற்றி வைக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.


 இந்திய  சீன எல்லையில், இரு தரப்பு இராணுவத்திற்கு இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். பல சுற்று உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், இந்தியாவும் சீனாவிற்கும் இடையிலான பதற்றம் குறையவில்லை.


மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எல்லையில் நமக்காக பாதுகாவல் பணியில் இருக்கும் நமது வீரர்களை மறந்து விடக் கூடாது என குறிப்பிட்டார்.


இவர்கள் மட்டுமல்லாது, துப்புரவுத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் இல்லை என்றால், நமது வாழ்க்கை, மிகவும் கடினமாக இருக்கும் எனவும். இப்போது பண்டிகை காலங்களில் இதை மந்தில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.


பண்டிகைகள் திருவிழாக்களை கொண்டாடும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கொரோனா நெருக்கடியை மனதில் கொண்டு நிதானத்துடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.


COVID-19 போரில், வெற்றி நிச்சயம் என பிரதமர் உறுதிபடக் கூறினார்.


ALSO READ | மிலிட்டரி கேண்டீனில் சீன பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம் விற்க தடையா..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR