புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மூன்று நாள் பயணமாக தாய்லாந்து (Thailand) இன்று புறப்பட உள்ளார். இந்தியா ஆசியான் மாநாடு மற்றும் தாய்லாந்தில் நடைபெற உள்ள 14வது கிழக்கு ஆசிய மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி (PM Modi) நவம்பர் 4 வரை தாய்லாந்தில் இருப்பார். பிரதமர் மோடியை பாங்காக்கிற்கு வர தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா (Prayut Chan-o-cha) அழைப்பு விடுத்துள்ளார். அங்கு செல்லும் பிரதமர் மோடி தாய்லாந்து பிரதமர் அளிக்கும் சிறப்பு விருந்திலும் அவர் கலந்து கொள்கிறார்.


குருநானக் தேவின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, அவரின் நினைவு நாணயத்தையும் வெளியிடுவார். இதனுடன், அவர் இந்திய சமூகம் (இந்திய வம்சாவளி) பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்றுவார். அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் (Tirukkural) நூலையும் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.


நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் 16 ஆவது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி மற்றும் தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவுடன் இணைந்து கலந்துக்கொள்வார். பிரதமர் மோடி மூன்று நல பயணத்தில் 16வது ஆசியான்-இந்தியா (ASEAN-India) மாநாடு, 14வது கிழக்காசிய மாநாடு மற்றும் 3வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (ஆர்சிஇபி-RCEP) மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்ப்பார்.