47-வது "மன் கி பாத்" நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று உரையாற்றினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு 47-வது "மன் கி பாத்" நிகழ்ச்சியில் கூறியதாவது...


"இஸ்லாமிய பெண்களுக்கான உரிமையினை முத்தலாக் மசோதா மூலம் பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்.


உலகின் மிகவும் பழமையான மொழியாக தமிழ் மொழி அறியப்படுவதால் உலக அரங்கில் இந்தியா பெருமை கொள்கிறது.


வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 125 கோடி இந்தியர்களும்  உதவிபுரிந்து வருகின்றனர். பேரழிவை ஏற்படுத்திய இந்த இயற்கை சீற்றங்கள் மக்களிடம் ஒற்றுமையை கொண்டு வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிறந்த நிர்வாகத்தை அறிமுகப்படுத்திய வாஜ்பாயை அவர்களின் பெருமையினை எந்நாளும் இந்நாடு போற்றும்." என குறிப்பிட்டுள்ளார்!