நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும்: மாநிலங்களவை எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுடன் தொடர்பில் இருக்குமாறு என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் மக்களுடன் சிறந்த வகையில் தொடர்பில் இருக்குமாறு என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
முன்னதாக, மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 45 உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாடி, மக்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை செய்ய வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
இது குறித்து பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி புதிய எம்.பி.க்களிடம் சமீபத்திய தொழில்நுட்பத்தை சிறந்த வகையில் பயன்படுத்திக் கொண்டு, மக்களுடன் சிறந்த வகையில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
ALSO READ | வாழ்விலும் சாவிலும் ஹீரோவான இளைஞர்... மூளை சாவு அடைந்ததால் உடல் உறுப்பு தானம்..!!!
அரசு தொடர்பான தொள்கைகள் மற்றும் பிற தகவல்களை பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என எம்.பி.க்களை வலியுறுத்தினார். மக்களுக்கான அவையிலும், துறையிலும் திறம்பட செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மக்களுடன் தொடர்பு கொள்ள சமீபத்திய தொழில்நுட்பத்தையும் சமூக ஊடகங்களையும் சேர்த்து பயன்படுத்திக் கொள்வதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
ALSO READ | அண்டார்டிகாவின் கடற்பரப்பில் மீத்தேன் கசிவு.. விஞ்ஞானிகள் கவலை.. !!!