அமெரிக்க சுதந்திர தினம்: பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் வாழ்த்து
வரலாற்றில் கி.பி. 1492 ஆம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்பதை நாம் அனைவரும் படித்திருப்போம். ஆரம்பத்தில் போர்ச்சுகீசியர்களும், ஸ்பானியர்கள் அமெரிக்காவில் குடியேறினர்.
வரலாற்றின் பாட புத்தககங்களில் கி.பி. 1492 ஆம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்பதை நாம் அனைவரும் படித்திருப்போம். ஆரம்பத்தில் போர்ச்சுகீசியர்களும், ஸ்பானியர்கள் அமெரிக்காவில் குடியேறிய நிலையில், பின்னர், பிரான்ஸ் ,இங்கிலாந்து, ஹாலந்து, போன்ற பிற நாட்டினரும் அங்கே குடியேற ஆரம்பித்தனர். இதனால், அவர்களுக்கு இடையே மோதல்கள் தொடங்கின.
அதில் பிரிட்டிஷ் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை தொடங்கிய நிலையில் 1770-ம் ஆண்டுகளில் தொடக்கத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து அமெரிக்க புரட்சி போருக்கு காரணமாக அமைந்தது.
அப்போது, அமெரிக்க (America) போர்ப்படையின் தளபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் நியமிக்கப்பட்டார். ஆரம்ப கட்டத்தில் சிறு சிறு தோல்விகளை சந்தித்த போதிலும், இறுதியில் ஜார்ஜ் வாஷிங்டன் வெற்றியைப் பதிவு செய்தார்.
ALSO READ | Twitter-க்கு போட்டியாக GETTR; டொனால்ட் டிரம்ப் குழுவின் புது சமூக ஊடக தளம்
இதனையடுத்து,1776 ஜூலை ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் தாமஸ் ஜெஃபர்சன் என்பவரின் பெரும் பங்களிப்புடன் அமெரிக்காவின் 13 மாகாணப்ங்களும் கிரேட் பிரிட்டனில் இருந்து சுதந்திர பிரகடனம் வாசிக்கப்பட்டு, அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்றிலிருந்து,ஒவ்வொரு வருடமும் ஜுலை 4ம் தேதி அமெரிக்க சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி, பிரதமர் மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். இது குறித்து பிரதமர் மோடியும் (PM Narerndra Modi), வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் ட்வீட் செய்துள்ளனர்.
இந்தியா அமெரிக்கா இடையிலான உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிவில் அணுசக்தி, விண்வெளி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது.
ALSO READ | கனடா, அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம்; நூற்றுக்கணக்கானோர் பலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR