வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றை முன்வைத்து எதிர்க்கட்சி உட்பட பல கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக பாராளுமன்ற செயல்பாடுகளை முடக்கினர். முத்தலாக் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற இயலாமல் போனது. 


தற்போது நடைபெறவிருக்கும் மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, மத்திய அரசுக்கு எதிராக நம்மிக்கையில்லா தீர்மானம் உட்பட பல பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. 


 



 


இந்நிலையில், இன்று மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியது, எதிர்க்கட்சிகள் எழுப்புகிற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். எனவே பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக இயங்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 


 



 


இதேபோல், நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எந்தவித இடையூறுகள் இல்லாமல் சுமுகமாக இயங்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.