14:00 16-08-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் டெல்லி AIIMS வருகை புரிந்துள்ளனர்!



முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 



கடந்த 9 வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய். இவருக்கு வயது 93. அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். வாஜ்பாய் உடல் நிலை பற்றி கேட்டறிய இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர். 





முன்னதாக கடந்த 24 மணி நேரமாக வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் அறிக்கை வெளியிட்டது.


இந்நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மற்றொரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.