Ramar Temple PM Modi Cabinet: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை திரட்டிய நன்கொடை மூலம் ராமர் கோவில் திறக்கப்பட்டது. ராமர் கோவிலின் தரை தளம் மட்டும் தற்போது தயார் ஆகி உள்ளது. அதில், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி முன்னிலையில் ராமர் சிலை கடந்த திங்கட்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடியின் அறிவுரை    


அந்த வகையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரும் நாட்களில் தனது ஒட்டுமொத்த அமைச்சரவையை சகாக்களையும் அயோத்தி ராமர் கோவிலுக்கு, சாமி தரிசனத்திற்காக அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையின் அமைச்சர்கள் வரும் மார்ச் மாதம் வரை ராமர் கோவிலுக்கு செல்லக்கூடாது என முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமரை தரிசனம் செய்ய அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் தற்போதைய காலகட்டத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


மேலும் படிக்க | 250 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் வடிக்கப்பட்ட அயோத்தி ராமர் சிலை!


குறிப்பாக, நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வி.வி.ஐ.பி மற்றும் வி.ஐ.பி உள்ளிட்ட பலரின் வருகையால் பொதுமக்களுக்கு ஏற்படும் கடும் நெரிசலை ராமர் கோவிலில் சந்திக்கின்றனர். எனவே, மக்களின் சிரமத்தை போக்கவும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இணைந்து, ராமர் கோவிலுக்கு செல்வதை ஒத்திவைக்குமாறு அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தனது உயர்மட்ட அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.


5 லட்சம் பக்தர்கள்


பக்தர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்ததாகவும், மத்திய அமைச்சர்கள் வரும் மார்ச் மாதத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல திட்டமிடலாம் அல்லது தங்களின் தற்போதைய திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முன்மொழிந்ததாக அரசு வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் தெரிவித்தன.


ராமர் சிலை பிரான் பிரதிஷ்டை கடந்த திங்கட்கிழமை பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி அன்று பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ராமர் கோயிலுக்கு பக்தர்களின் வருகை என்பது அதிகரித்தது. அயோத்தியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 25) சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதை அடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | லோக்சபா தேர்தல் 2024: மேற்கு வங்காளத்திற்குப் பிறகு, பஞ்சாபிலும் காங்கிரசுக்கு அதிர்ச்சி


விரைவு நடவடிக்கைப் படை (RAF) துணை கமாண்டன்ட் அருண் குமார் திவாரி கூறுகையில், "கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் சுமார் 1,000 ஜவான்களுடன் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டு, பக்தர்களுக்கு குறைந்தபட்ச சிரமத்தை உறுதி செய்வோம்" என்று உறுதியளித்தார். இந்த பணி அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சர்வதேச ராமாயண உத்சவம்


ராமர் கோவிலுக்கு மட்டுமின்றி பக்தர்கள் அதன் அருகில் பல ஆன்மீக தலங்களுக்கும் செல்கின்றனர். ராமர் கோவிலுக்கு அருகில் உள்ள ஹனுமான் கர்ஹி கோயிலிலும் கணிசமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுமனுக்கு லட்டுகளை சமர்ப்பித்து தங்களின் வழிபாட்டை மேற்கொண்டனர்.


அயோத்தி நகரில் உள்ள ராம் கதா பூங்கா மற்றும் துளசி உத்யன் ஆகிய இடங்களில் சர்வதேச ராமாயண உத்சவம் நேற்று தொடங்கியது. வரும் ஜன. 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அயோத்தி நகரத்தில் பண்டிகை சூழல் அடுத்த சில நாட்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் மற்றும் உத்தரபிரதேசத்தின் சர்வதேச ராமாயணம் மற்றும் வேத ஆராய்ச்சி நிறுவனம் கலாச்சார துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, மொரிஷியஸ் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளில் இருந்து பலர் கலந்துகொண்டுள்ளனர்.


மேலும் படிக்க | மம்தா பானர்ஜி இல்லாமல், 'இந்தியா கூட்டணி'யை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது: காங்கிரஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ