குஜராத் மாநிலம் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி அகமதாபாத் சபர்மதி ரேனிப்பில் வாக்களித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ரேனிப் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் பிரதமர் மோடி வருசையில் நின்று வாக்களித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


 



 


 



 


குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


குஜராத் சட்டசபைக்கான 182 தொகுதிகளில் 89 இடங்களில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்று நடந்துக்கொண்டு இருக்கும் குஜராத் மாநில 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 


இந்நிலையில் குஜராத் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் வந்தார். அங்கு ரேனிப் என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுடன் வருசையில் நின்று வாக்களித்தார்.