நாட்டில் தடுப்பூசி போடப்படும் வேகம் மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி
உலகெங்கிலும் கோவின் (CoWIN ) இயங்குதளத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது குறித்தும் பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக மூத்த அதிகாரிகளுடன் நேற்று பிரதமர் மோடி (PM Modi) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
ஆய்வுக் கூட்டத்தில், தடுப்பூசி போடப்படும் பணியில் உள்ள முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு விரிவாக எடுத்துரைத்தனர். வரும் காலத்தில், தடுப்புமருந்துகளின் சப்ளை மற்றும் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
நாட்டில் 128 மாவட்டங்களில் 45 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி (Corona Vaccine) போட்டுள்ளன என்றும், 16 மாவட்டங்களில் இந்த வயதிற்குட்பட்ட 90% க்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகரித்து வரும் தொற்றுநோய்களைக் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கியமான கருவியாக பரிசோதனை நடவடிக்கை இருப்பதால், அதன் வேகம் குறையாமல் இருக்க மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ALSO READ: Delta Plus Variant அறிகுறிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை: முழு விவரம்
உலகெங்கிலும் கோவின் (CoWIN ) இயங்குதளத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது குறித்தும் பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த பிரதமர், ஆர்வத்தை வெளிப்படுத்திய அனைத்து நாடுகளுக்கும் இந்தியாவின் (India) கோவின் தளத்தை பயன்படுத்த உதவ வேண்டும் என்று கூறினார்.
நாட்டில் தடுப்பூசி போடப்படும் வேகம் திருப்தியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுவரை 5.6% மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடைமுறை கடந்த 21ம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், முதல் நாள் அன்றே, 85 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 6 நாட்களில் 3.77 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மலேசியா, சவுதி அரேபியா மற்றும் கனடாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகமாகும். ஒவ்வொரு நாளும் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மேலும் கூறுகையில், "தடுப்பூசி மக்களை சென்றடைய புதுமையான வழிகளை ஆராய்ந்து செயல்படுத்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளை இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இது வரை நாட்டில் மொத்தம் 32 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: TN Delta Plus Corona: தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR