PM Modi in Kanpur: இன்று கான்பூர் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ஐஐடியில் இருந்து கீதா நகர் ஸ்டேஷன் வரை மெட்ரோவில் பயணம் செகிறார். இதனுடன், நிராலா நகர் ரயில்வே மைதானத்தில் பல திட்டங்களைத் தொடங்கி வைத்து பேரணியில் உரையாற்றுகிறார். அதன்பிறகு, இன்று மாலை 3:20 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் உ.பி. மாநில ​​ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் கலந்து உடன் இருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யோகி மற்றும் ஹர்தீப் பூரி ஆகியோர் பிரதமர் மோடியுடன் ஐஐடி மெட்ரோவில் முதல் முறையாக பயணம் செய்தனர்.


அனைவரும் ஐஐடி மெட்ரோ நிலையத்திலிருந்து கீதா நகர் மெட்ரோ நிலையம் வரை பயணம் செய்தனர்.


முன்னதாக, மெட்ரோ கண்காட்சி மற்றும் அதன் சிறப்புகள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி கேட்டு அறிந்து கொண்டார்.


கான்பூர் மெட்ரோ ரயில் திட்டம் 9 கிமீ வரை தொடங்கப்பட்டு உள்ளது. ஐஐடி கான்பூரில் இருந்து மோதி ஜீல் வரை மெட்ரோ சேவையை நீண்டுள்ளது.



அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களை மாநில முதல்வர் யோகி மற்றும் நாட்டின் பிரதமர் மோடி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மோடியின் இன்றைய பயணம்:


காலை 10:25 மணிக்கு சாகேரி விமான நிலையத்திற்கு வந்தார்.
11:00 மணிக்கு ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
மதியம் 12:30 மணிக்கு மெட்ரோவில் பயணம் மேற்கொண்டார். 
கீதாநகர் மெட்ரோ நிலையத்திற்கு 12:40க்கு வந்தடைந்தார்.
1:45 மணிக்கு நிரலா நகர் ரயில்வே மைதான பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
2:45 மணிக்கு நிராலா நகர் மைதானத்தில் இருந்து சாகேரி புறப்பட்டு செல்வார்.
சாகேரி விமான நிலையத்தில் இருந்து 3:20 மணிக்கு டெல்லி சென்றடைவார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR