G-7 Summit in England: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பிரிட்டனில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் (G7 Summit) பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். பிரதமர் தனது உரையில், 'ஒரே பூமி-ஒரே ஆரோக்கியம்' (One Earth-One Health), அதாவது ஒரே பூமி, ஒரே வகையான ஆரோக்கியம் என்ற செய்தியை உலகிற்கு வழங்கினார். ஜெர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் பிரதமர் மோடியின் இந்த சூத்திரத்தை குறிப்பிட்டு, அதற்கு தனது முழு ஆதரவும் உள்ளதாக தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்று (Coronavirus) பற்றி குறிப்பிட்ட இந்திய பிரதமர், இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் நன்றி  தெரிவித்தார். தொடர்ந்து இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த, உலகளாவிய ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும் ஆதரவு ஆகியவை அதிகமாக தேவைப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.


'பில்ட் பேக் பெட்டர்' என்பது ஜி 7 இன் கருப்பொருள்


இந்த ஆண்டு ஜி -7 உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'பில்ட் பேக் பெட்டர்' (Build Back Better) அதாவது சிறந்த வழியில் மீண்டு வருவோம் என்பதாக இருந்தது. இந்த உச்சிமாநாட்டில், கொரோனா வைரஸ், தடையற்ற வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. கொரோனா தொற்றுநோயிலிருந்து உலகை எவ்வாறு விடுவிப்பது, அதன் பின்னர் வலுவான முறையில் எவ்வாறு மீள்வது ஆகிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்படும். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடியின் (PM Modi) கருத்து மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


ஜி-7 உச்சி மாநாட்டில் விருந்தினர்களாக இந்த நாடுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது


இந்தியாவைத் தவிர, கொரியா குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்காவும் 2021 ஜி 7 உச்சி மாநாட்டில் விருந்தினர் நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன. ஜி -7 நாடுகளில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகியவை உறுப்பினர் நாடுகளாக உள்ளன. 


ALSO READ: G7 Summit: ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்


இந்த உறுப்பு நாடுகள் அனைத்தும் வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்துகின்றன. உச்சிமாநாட்டை நடத்தும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ​​ஜான்சன் (Boris Johnson) கடந்த ஆண்டு தொற்றுநோய்க்குப் பிறகு முதல்முறையாக ஒரு பெரிய நிகழ்வு நேரடியாக நடத்தப்படுவதைப் பார்ப்பது மிகவும் இனிமையானதாக இருக்கிறது என்று கூறினார்.


உலகளாவிய சூழலில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கு


பிரதமர் மோடிக்கு முன்பு, இந்திய அரசாங்கத்தின் மூன்று பெரிய மத்திய அமைச்சர்களும் தங்கள் அமைச்சகங்களின்படி இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ALSO READ:G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ள பிரிட்டன்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR