மோடி, சந்திரசேகர் ராவ், அசதுதீன் ஒவைசி ஆகிய மூவரும் ஓரே அணி தான் என்றும் அவர்களை நம்பி தெலங்கானா மக்கள் ஏமாறவேண்டாம் என ராகுல் வேண்டுகோள்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவில் வரும் 7 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கத்வலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக-க்கு தெலுங்கானாராஷ்டிர சமிதி கட்சி ஆதரவு அளித்ததை சுட்டிக்காட்டினார். 


பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதற்கு பாஜகவின் அழுத்தம் காரணமாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாராட்டு தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் ரப்பர் ஸ்டேம்பாக சந்திரசேகரராவ் செயல்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 


மேலும், பாஜகவுக்காக சந்திரசேகரராவ் பணியாற்றுவதால் அவர்களை நம்பி மக்கள் முட்டாளாக வேண்டாம் என்றும் ராகுல் வலியுறுத்தினார். 


இதையடுத்து, மகாராஷ்டிரா விவசாயி வெங்காயம் விற்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அனுப்பிய செய்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.



இந்நிலையில், இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; பிரதமர் நரேந்திர மோடி இருவிதமான இந்தியாவை உருவாக்குகிறார். ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த வேலையும் செய்யாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளதன் மூலம் அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், 750 கிலோ வெங்காயத்தை வெறும் 1064 ரூபாய்க்கு விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என பதிவிட்டுள்ளார்.