புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்தில் ₹1550 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரிசா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவேற்றப்பட்ட புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக ஒரிசா மாநிலம் பயணம் மேற்கொண்டுள்ளார்.


இப்பயணத்தின் ஒருபகுதியாக பாலாங்கிர் நகரில் நடைபெற்ற விழாவில் ஜார்சுகுடா-விஜியநகரம் மற்றும் சம்பல்பூர்-அங்குல் பாதையில் ₹1085 கோடி செலவில்  813 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்சாரமயமாக்கப்பட்ட ரெயில்வே வழித்தடத்தை மோடி நாட்டுக்காக அர்ப்பணித்தார். 



பின்னர் 15 கிலோமீட்டர் நீளத்தில் ₹115 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பாலாங்கிர்-பிச்சுப்பலி ரெயில் பாதையையும் அவர் திறந்து வைத்தார். அதேவேலையில் ₹100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பண்டக கிடங்கு, ₹27.4 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ரெயில்வே பாலம் மற்றும் 6 புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


சோனேபூர் பகுதியில் ₹15.81 கோடி ரூபாய் செலவில் கேந்திர வித்யாலயா பள்ளி கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டிய மோடி, சித்தேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சில கோவில்கள் மற்றும் நினைவகங்களை புதுப்பித்து புனரமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.