முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி தந்துள்ளது என பிரதமர் மோடி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசியை பார்வையிட்டார். காசிபூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். 
 
அதில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று ஆசை வார்த்தையை கூறி அவர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. கடந்த 2009 ஆம் ‌ஆண்டு தேர்தலின் போது விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது. 


ஆனால் ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆகவே காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். விவசாயிகளின் காவலனாக மத்திய அரசு உள்ளது. அதனால் திருடர்கள் குறுக்கு வழியில் உள்ளே நுழைய அனுமதிக்கமாட்டோம் என்றார். 


ஏழைகள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்கட்சிகளின் ஆசை வார்த்தைக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.