புதுடெல்லி: ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 2 பரிசுத் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று மன் கி பாத் நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு மாதம்தோறும் அகில இந்திய வானொலி மூலம் "மன் கி பாத்" என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார்.


அந்த வகையில், இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் தனது வானொலி உரையை நேற்று அவர் ஆற்றினார்.


தொடர்ந்து அவர் பேசும்போது ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் 2 பரிசுத்திட்டங்களை அறிவித்தார்.


இதில் "லக்கி கிரஹாக் யோஜனா" பொது மக்களுக்கானது. மற்றும் "டிகிதன் வியாபார் யோஜனா" வியாபாரிகளுக்கானது.


டிஜிட்டல் மூலம் பொருட்களை வாங்குகிற பொது மக்களுக்கு தினந்தோறும் குலுக்கல் நடத்தி 15000 பேருக்கு தலா ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மேலும் இந்த திட்டம் 100 நாட்களுக்கு செயல்படுத்தப்படும் என்றார்.


இந்த பரிசினை பெறுவதற்கு பொதுமக்கள் ரூபே அட்டை, யு.பி.ஐ., யு.எஸ்.எஸ்.டி., செல்போன் மின்னணு பண பரிமாற்றம், மின்னணு வங்கிச்சேவைகளை பயன்படுத்தி, வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.


மேலும் வாரம் ஒருமுறை பெரிய குலுக்கல் நடத்தி, லட்சக்கணக்கில் பரிசு வழங்கப்படும். மேலும் ஏப்ரல் 14-ம் தேதி பம்பர் பரிசு குலுக்கல் நடத்தி, கோடிக்கணக்கில் பரிசு வழங்கப்படும்.


ரொக்கமில்லா பண பரிமாற்றத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்கிற வியாபாரிகளுக்கு, பொதுமக்களை ஊக்கப்படுத்துகிற வியாபாரிகளுக்கு ஆயிரக்கணக்கில் பரிசுகள் வழங்கப்படும்.


எனவே, ரூ.50 முதல் ரூ.3 ஆயிரத்துக்குள் பொருட்களை வாங்குகிற பொது மக்களுக்கான "லக்கி கிரஹாக் யோஜனா" ஆகும்.