கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு சீனாவிற்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 811 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சீன அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வந்தாலும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. சீனாவில் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இந்நிலையில், கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ்  வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியாகி  இருந்தனர். இந்த எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 


இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்க உதவியதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஹூபெய் மாகாணத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு சீன அரசு செய்த உதவிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.x