PM Modi Rituals Ahead Ram Mandir Inauguration: உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா திறப்பு விழா நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவரது அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனில் இன்று ஆடியோ செய்தி ஒன்று வெளியிட்டார். அதில் இன்று முதல் 11 நாள் சிறப்பு சடங்குகளை தொடங்க இருப்பதாக அறிவித்தார். மேலும் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் மங்களகரமானது எனவும் அந்நிகழ்வுக்கு சாட்சியாக இருப்பது அதிர்ஷ்டம் என்றும் அதில் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுபவிக்காத உணர்வுகள்


அதில், "ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. கும்பாபிஷேகத்தின் போது இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னை உருவாக்கினார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன், என் வாழ்க்கையில் முதல்முறையாக இதுபோன்ற உணர்வுகளை நான் அனுபவிக்கிறேன். வாழ்க்கையின் சில தருணங்கள் தெய்வீக ஆசீர்வாதத்தால் மட்டுமே நிஜமாகின்றன. இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள ராமர் பக்தர்கள் மற்றும் அனைவருக்கும் இது ஒரு புனிதமான தருணம். எங்கும் ராமர் பக்தியின் அற்புதமான சூழல் உள்ளது" என்றார்.



மேலும் படிக்க | Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது?


ராம பிரான் பிரதிஷ்டா விழா தொடர்பான புனித நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள கடினமான வழிகாட்டுதல்களை பிரதமர் பின்பற்றுகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்து வேதங்களில், பிரதிஷ்டைக்கு முன்னதாக விரதம் இருக்க குறிப்பிட்ட வழிமுறைகள் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தனது தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக, பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, பிரார்த்தனை செய்வது மற்றும் எளிய உணவுகளை உட்கொள்வது போன்ற சடங்குகளை பின்பற்றுகிறார்.



7,000 பேருக்கு அழைப்பு


அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெற உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.


விழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான அந்தணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த அழைப்பாளர்களில் ராமர் கோயிலைக் கட்டிய தொழிலாளர்களின் குடும்பங்களும் அடங்கும். பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் உட்பட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேக விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 



வரும் ஜன. 16ஆம் தேதி முதல் அயோத்தியில் வேத சடங்குகள் தொடங்கும். வாரணாசியைச் சேர்ந்த அர்ச்சகர் லக்ஷ்மி காந்த் தீட்சித் என்பவர் வரும் ஜன. 22ஆம் தேதி முக்கிய 'பிரான் பிரதிஷ்டை' விழாவை நடத்துகிறார். 1008 ஹண்டி மகாயக்ஞமும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்தில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற புராதன சிலைகள், தூண்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ