மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு "மன் கி பாத்" நிகழ்ச்சியில் கூறியதாவது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யோகா தின நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளும் பங்கேற்றது இந்திய நாட்டிற்கு பெருமையாள விஷயமாகும். எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டது பாராட்ட கூடிய விஷயம். நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இடங்களிலும் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது மகிழ்ச்சி அளிக்கின்றது. மன அழுத்தத்தை குறைக்கும், புத்துணர்ச்சி தரும் யோகா-வானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


வரும் ஜூலை மாதம் முதல் நாள் தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கபடுகிறது. இதனையொட்டி இந்திய மருத்துவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிக்கலான நோய்களை குனப்படுத்தும் மருத்துவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என தெரிவித்தார்.


மேலும் சீக்கிய மத குரு குருநானக், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் ஷியாம் பிரசாத் முகர்ஜி ஆகியோரின் பெருமைக்குரிய பணிகளை குறித்து பேசிய அவர், அவர்களது சிறப்பு எந்நாளும் நிலைத்து இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.



அடுத்தாண்டு ஏப்ரல் மாதம், ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் முடிவடைகிறது. இந்த கருப்பு தினத்தைப் பற்றியும் பிரதமர் மோடி அவர்கள் தனது உறையில் குறிப்பிட்டுள்ளார்.


நாடுமுழுவதிலும் பொதுமக்கள் GST வரிக்கு நல்ல ஆதரவினை அளித்து வருகின்றனர். இதனால் நாட்டில் GST வரி வசூலானது முறையாகவும், சிறப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்த பெருமை மாநில அரசுகளையே சேரும் எனவும் அவர் தனது உறையில் குறிப்பிட்டுள்ளார்.