பிரதமர் நரேந்திரமோடி இன்று உ.பி. ன் வாரணாசி மற்றும் காஜிப்பூர் பகுதியை பார்வையிட்ட பிறகு அந்தமான் நிக்கோபார் தீவுகளை பார்வையிட இன்று மாலை செய்கிறார்......


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசியை பார்வையிட இன்று செல்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை பாஜக மதிப்பதில்லை என்று அக்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் வேளையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த 2 மாதங்களில், பிரதமர் மோடி வாராணசிக்குப் பயணம் மேற்கொள்வது 2-வது முறையாகும்.


வாராணசியின் தேசிய விதைகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனம், தெற்காசிய பிராந்திய மையம் ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்க உள்ளார். இந்த மையமானது, தெற்காசிய மற்றும் சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அரிசி ஆராய்ச்சியில் ஈடுபடவும், அந்நாட்டினருக்குப் பயிற்சி அளிக்கும் வகையிலும் செயல்பட உள்ளது.


ஒரு மாவட்டம், ஒரு விளைபொருள் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அவர் உரையாற்றுகிறார். பின்னர், காஜிபூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாராஜா சுஹேல்தேவின் நினைவு தபால்தலையை வெளியிடுகிறார்.


இதையடுத்து, இன்று மாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளை பார்வையிட பார்வையிடயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.