கோபோ: கருப்பு பண ஒழிப்பு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி, ஜப்பான் நாட்டில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று அந்த நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் டோக்கியோ நகரிலிருந்து கோபோ நகருக்கு செல்லும் ஷிங்கான்சென் புல்லட் ரெயிலில் பயணம் செய்தார்.


அந்த நாட்டின் 6-வது பெரிய நகரமான கோபோ நகரில், இந்தியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இந்தியாவில் கருப்பு பண ஒழிப்புக்காக ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து நிலவுகிற சூழல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் பிரதமர் மோடி. 


இந்தியாவில் செல்லாது ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கு டிசம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. கருப்பு பண ஒழிப்புக்காக அடுத்த அதிரடி திட்டம் தொடரும் என்று பிரதர் மோடி  குறிப்பிட்டார்.


2011 ஆண்டு பூகம்பம், சுனாமியால் ஏற்பட்ட பேரழிவை ஜப்பான் மக்கள் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, எப்படி ஏற்றுக்கொண்டு சமாளித்தார்களோ, அதே போன்று இந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் ஒழிப்பு நாட்டு நலனுக்காக இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் கூறி மக்களை மக்களை வணங்கினார் மோடி.


இந்த முடிவால் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை நான் நீண்ட காலம் யோசித்தேன். இந்த ரகசியத்தை காப்பதும் முக்கியம் என நினைத்தேன். ஆனால் இதற்கு இந்தளவுக்கு ஆதரவும், வரவேற்பும் இருக்கும் என்று நான் ஒருபோதும் எண்ணிப்பார்க்கவில்லை என்றார்.



கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக எங்கள் அரசு சுமார் ரூ.1 லட்சம் கோடி கருப்பு பணத்தை கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு நன்மையும் 125 கோடி இந்தியர்களால் தான். நேரடி அந்நிய முதலீட்டில் இந்தியா வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. வறுமையின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியா மீள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.