புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் இன்று மோடி வழிபாடு
உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று சென்று வழிபாடு செய்தார்.
காலை 9.30 மணிக்கு கேதார்நாத் கோயிலுக்கு சென்ற மோடி, அங்கு சிவனுக்கு நடக்கும் ருத்ரஅபிஷே கத்தில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் ஹரித்வாரில் அமைந்துள்ள யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி யோகபீட ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்.
இவ்விழாவில் உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மத்திய இணையமைச்சர் சத்பால் மகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.