புதுடெல்லி: அயோத்தி வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியானது. தீர்ப்பு வெளியாகுவதற்கு முன்பு நரேந்திர மோடி, என்ன நடந்தாலும், இந்த விசாரணை தினமும் விசாரிக்கப்பட வேண்டும் என்று முழு நாடும் விரும்பபியது. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று முழு உலகத்துக்கு தெரியும். இந்தியாவின் ஜனநாயகம் எவ்வளவு துடிப்பானது மற்றும் வலுவானது என்பதை உலகம் அறிந்திருக்கிறது எனக் கூறியிருந்தார். தற்போது தீர்ப்பு வெளியானதை அடுத்து, ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் திறந்த மனதுடன் தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். உலக முழுவதும் இந்தியா அறியப்படுவது "பன்முகத்தன்மையில் ஒற்றுமை". இன்று இந்த மந்திரம் சொல்லுக்கு ஏற்ப நாடு உள்ளது. மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த மந்திரத்தை யாராவது புரிந்து கொள்ள வேண்டுமானால், இன்றைய சம்பவத்தை அவர் நிச்சயமாகக் குறிப்பிடுவார். இந்த சம்பவம் வரலாற்றின் பக்கங்களிலிருந்து எழுப்பப்படவில்லை, இது 125 கோடி இந்தியர்களால் வரலாற்றில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையின் போது, ​​உச்சநீதிமன்றம் அனைத்து தரப்பினரையும் நிதானத்துடனும் பொறுமையுடனும் விசாரித்தது. சிறந்த விஷயம் என்னவென்றால், முடிவு ஒருமித்த கருத்தினால் வந்துள்ளது எனக் கூறினார்.


பிரதமர் மோடி தனது உரையில், "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று முழு உலகத்திற்கு தெரியும். ஆனால் இந்தியாவின் ஜனநாயகம் எவ்வளவு துடிப்பானது மற்றும் வலுவானது என்பதை இன்று உலகம் அறிந்திருக்கிறது. தீர்ப்பின் பின்னர், ஒவ்வொரு வகுப்பினரும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு மதமும் உட்பட முழு நாடும் அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட விதம், இது இந்தியாவின் பண்டைய கலாச்சாரம், மரபுகள் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை பிரதிபலிக்கிறது.


அவர் மேலும் கூறுகையில், "இன்று இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயம். இந்த விசாரணையின் போது, உச்சநீதிமன்றம் அனைவரின் வாதத்தை மிகவும் பொறுமையாகக் கேட்கப்பட்டது. ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என்பது முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான விஷயம்.


பிரதமர் மோடி கூறுகையில், "இந்த தீர்ப்பு மூலம் நாட்டின் நீதிபதிகள், நீதிமன்றங்கள் மற்றும் நமது நீதி அமைப்பு ஆகியவை பாராட்டுக்கு தகுதியானவை. இன்று, அயோத்தி மீதான தீர்ப்போடு, நவம்பர் 9 ஆம் தேதி, நாட்டு மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதையும் நிருபித்துள்ளது. இன்றைய செய்தி மூலம் "சேர்ப்பது - சேருவது மற்றும் ஒன்றாக வாழ்வது" நிரூபணம் ஆகியுள்ளது. 


பிரதமர் மோடி கூறுகையில், புதிய இந்தியாவில் பயம், கசப்பு மற்றும் எதிர்மறைக்கு இடமில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு எங்களுக்கு ஒரு புதிய விடியலைக் கொண்டு வந்துள்ளது. இந்த சர்ச்சை பல தலைமுறைகளை பாதித்திருக்கலாம், ஆனால் இந்த முடிவிற்குப் பிறகு, இப்போது ஒரு புதிய தலைமுறை புதிதாக ஒரு புதிய இந்தியாவை உருவாக்கத் தொடங்கும் என்ற தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும்.


அயோத்தி ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த வழக்கு சம்பந்தமாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷண், மற்றும் எஸ் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், சுமார் 40 நாட்களாக நடத்தி வந்தது. இன்று அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.