ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி & அமித் ஷா ட்வீட்
5 ஆண்டுகளாக ஜார்கண்ட் மக்களுக்காக சேவை செய்ய வாய்ப்பளித்ததற்காக நன்றி. வெற்றிக்கு அயராத உழைத்த பாஜக நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் எனக் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஞ்சி / புதுடெல்லி: 2019 ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் (Jharkhand Assembly Election 2019) முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது கருத்தை தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி ஜார்கண்ட் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை தொடர்ந்து அரசாங்கத்தின் முன் எழுப்பும் என்று அவர் கூறினார். தேர்தலில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடுமையாக உழைத்தமைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்வீட்டில், "ஜார்கண்ட் மக்களுக்கு அவர்கள் பல ஆண்டுகளாக பாஜகவுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறுகிறேன்" என்று கூறியுள்ளார். கடின உழைப்பாளியான கட்சி ஊழியர்களின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். வரவிருக்கும் காலத்தில் மாநிலத்தின் சேவை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பிரச்சினைகளை நாங்கள் தொடர்ந்து எழுப்புவோம்.'' என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறுகையில், "5 ஆண்டுகளாக மாநிலத்திற்கு சேவை செய்ய பாஜகவுக்கு கிடைத்த வாய்ப்பிற்காக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக தொடர்ந்து மாநில வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கும். அனைத்து பாஜக நிர்வாகிகளின் அயராத உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.
2019 ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் & ஜே.எம்.எம் கூட்டணி மிக பெரிய வெற்றியை நோக்கி செல்கிறது. மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை விட அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு மொத்தம் 81 தொகுதிகள் உண்டு. அந்த மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆரம்பத்தில் ஆளும் பாஜக முன்னணி வகித்தாலும், அடுத்தடுத்து சுற்றுகளில் ஜேஎம்எம் + காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது. அதுவும் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் வெற்றி பெரும் நிலை உருவாகி உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.