பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், BRICS உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்கள்
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டின் கருப்பொருள் “உலகளாவிய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் புதுமைகள் நிறைந்த வளர்ச்சிக்கான பிரிக்ஸ் கூட்டாளித்துவம்” என்பதாகும்.
பன்னிரண்டாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நவம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் (Chinese president Xi Jinping ) மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ( PM Narendra Modi) மோடி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய சீன எல்லை பகுதியில் பதற்றம் தொடங்கியதிலிருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான முதல் சந்திப்பு இருக்கும். இந்த சந்திப்பு இணையம் மூலம் நடக்கும் மெய்நிகர் சந்திப்பாக இருக்கும்.
பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் இணையம் மூலம் மெய்நிகர் கூட்டமாக ரஷ்யாவில் நடந்தது, NSA அஜித் டோவல் இந்திய தரப்பின் சார்ப்பில் பங்கேற்றார். சீன தரப்பில், சீன தூதரான யாங் ஜீச்சி பங்கேற்றார்.
இந்த முறை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டின் கருப்பொருள் “உலகளாவிய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் புதுமைகள் நிறைந்த வளர்ச்சிக்கான பிரிக்ஸ் கூட்டாளித்துவம்” என்பதாகும்.
மேலும் படிக்க | சீனாவின் மூக்கை உடைக்க தயாராக உள்ளது ராணுவமும் விமானப்படையும்..!!!
"2020 ஆம் ஆண்டில் ரஷ்ய தலைமையிலான பிரிக்ஸ் கூட்டமைப்பின் முக்கிய நோக்கம், உறுப்பு நாடுகளின் மக்களின் வாழ்க்கைத் தரத்தைய மேம்படுத்த பாடுபவது" என்று ரஷ்யா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"உலகளாவிய அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையிலும், 2020 ஆம் ஆண்டில் ரஷ்ய தலைமையின் கீழ் பிரிக்ஸ் நடவடிக்கைகள் சீரான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஜனவரி 2020 முதல் வீடியோ கான்ஃபெரன்சிங் உட்பட 60 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன ”என்று ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் ஆலோசகர் அன்டன் கோபியாகோவ் கூறினார்.
ALSO READ | சீனாவில் அராஜகம்: உண்மை பேச எண்ணிய உள்ளம் விலையாகக் கொடுத்தது தன் உயிரை!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe