‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’: பிரதமர் மோடிக்கு ஐ.நா. விருது அறிவிப்பு!
சுற்றுச்சூழல் பாதுகாப்பாக சர்வதேச அளவில் பங்காற்றியவர்களுக்காக சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது ஐநா வழங்கும். அந்த வகையில் தற்போது இந்த ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஐ.நா., ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த விருது சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.